இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விடுதலை 1. திரைப்படம் விடுதலை-1 படத்தில் ஒரு பெண்கள் கூட்டத்தையே காவலர்கள் மானபங்க படுத்துவது போல் எடுத்திருக்கிறார்களே

 இந்த படத்தில் 1980களில் கதை ஆரம்பித்து கூறப்பட்டிருக்கும். 1987-ல் நடந்த சம்பவமாக கதை செல்லும். அதன்பின் இரண்டு வருடங்களில் இந்த சம்பவத்தை விவரிப்பதாக கூறுகிறார்கள். அன்றும் இன்றும்  குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் காவல்துறையினரின் கை ஓங்கி இருந்தது. வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு காவல் துறையை சார்ந்த பல நபர்கள் தங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வந்தார்கள். படத்தில் கூறப்பட்டது போல எண்பதுகளில் என்று திட்டவட்டமாக கூற முடியாது. படத்தில் காலகட்டம் உள்ளிட்ட எல்லாமே கற்பனை என்று கூறியிருக்கிறார்கள். எனவே அந்த எண்பதுகள் தான் அந்த காலகட்டம் என்று சொல்ல முடியாது. உண்மையில் இந்திய விடுதலைப் போராட்ட காலத்தை நினைவு படுத்தியது அந்த குண்டு வைத்து ரயிலை கவிழ்த்த நிகழ்வு. எத்தனையோ புதினங்கள் எழுதப்பட்டன விஜய் சேதுபதி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம் போன்ற விடுதலை வீரன் கதாபாத்திரங்கள் நெஞ்சை விட்டு நீங்காத ரயில் தகர்ப்பு சம்பவங்கள். இந்த விடுதலை திரைப்படம் இரண்டாவது பாகம் வெளிவரும்போது விஜய் சேதுபதி அந்த விடுதலை வீரனாக காட்டப்படுவார் என்று எதிர்பார்க்கலாம். எனவே சுதந்திர போராட்ட காலம்...