இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நன்றி கெட்டவர்களுக்கும், துரோகிகளுக்கும் என்ன வேறுபாடு?

துரோகம் செய்நன்றி மறத்தல் இரண்டுக்கும் வேறுபாடு என்று பெரிதாக எதுவும் இல்லை. முதலாவதின் அடுத்த நிலை தான் இரண்டாவது . நட்புடன் பழகி நம்மிடமிருந்து பெற முடிந்ததைப் பெற்றுக் கொண்டு விலகி விடுவது முதல் நிலை. இது ஒரு வகை ஏமாற்று வேலை     இதைவிட மோசமானது நம்மிடமிருந்து நயவஞ்சகமாக ஏதோ ஒன்றை அடைந்த பிறகு நமக்கே எதிராக செயல்படுவது   .இழிவானவர்களின் செயல்  இரண்டையுமே மன்னிப்பது கடினம் எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை  செய்நன்றி கொன்ற மகற்கு தவறுவது மனித இயல்பு மன்னிப்பது தெய்வீக பண்பு  நாமெல்லாம்  சாமானியர்கள் எனவே மன்னிக்க வேண்டாம் மறக்கவும் வேண்டாம் ஒதுங்கி விடலாம் செய்நன்றி கொன்றவர்களை நினைத்து மனம் புழுங்குவது ஒருவர் தனக்குத்தானே செய்து கொள்ளும் வஞ்சனை ஆகிவிடும் துரோகத்தை நினைத்து நினைத்து மருகி அதிக துன்பம் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பாதிப்பை அதிகமாகிக் கொள்கிறோம் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தான் எட்டப்பன் காந்தியை சுட்டுக் கொன்றான் கோட்சே சீசர் மனம் நொந்து பேசுவான்..அவன் இறக்கும் தருவாயில் ப்ரூட்டஸ் நீயுமா என்று கேட்ட அந்த வலி மிகு...

அருள் அதனை ஈன்ற அன்பை விட மேலானது. அந்த அருளை பொருள் என்ற செவிலித்தாய் தான் வளர்க்க முடியும்' என்ற வள்ளுவரின் குறள் (757) சரிதானா? அருளை பொருள் எப்படி வளர்க்க முடியும்? விளக்குவீர்களா?n

படம்
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு உண்மையான அன்பு என்பது ஒரு மென்மையான உணர்வு. யாரிடம் அன்பு உருவாகிறதோ அந்த அன்புக்குரிய நபர் துன்பத்தில் இருக்கும்போது அல்லது கண்கலங்கி நிற்கும் போது இயல்பாகவே கருணை என்ற ஒன்று அவரிடத்தில் பிறக்கும். அது அன்பின் வெளிப்பாடு ஆகும். அன்பின் குழந்தையாக.கருணை பிறக்கிறது . அன்பு என்பதை விட அற்புதமான உணர்வு அபூர்வமானதும் கூட. அதுவே உண்மை அன்பின் வெளிப்பாடு. அன்பு மகிழ்ச்சியைத் தரும் புன்னகை வரவழைக்கும் ஆனந்த நடனம் ஆடச் செய்யும். அதே நேரத்தில் அந்த அன்பினால் எழுந்த கருணை என்பது கண்ணீர் கசிய செய்யும் . மனம் கலங்கச் செய்யும்.. மனம் உருகி கண்ணீர் வழிந்து செய்வதறியாது தவிர்த்து பதைப்பதைப்புடன் படபடப்புடன் எந்த எல்லைக்கும் சென்று துயர் துடைக்கத் தூண்டும். அன்பிற்குறியவரின் வலி தீர வழி என்னவென்று அலைபாய்ந்து தேடித்தேடி அந்த துன்பத்தை தீர்க்கும் வரை போராடும். எனவே அன்பினால் பிறந்த கருணை அன்பை விட மேலானது. இங்கே ஐயன் உரைப்பது சக உயிர்களிடத்தில் உருவாகும் அன்பு பற்றிய விளக்கம். மனித நேயம் என்று இன்று அறியப்படுவதாகும்.In the Wider perspecti...

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்' (குறள் எண்:373) என்னதான் நன்றாக, அதிக அளவு படித்திருந்தாலும், விதிப்படி உள்ள அறிவு தான் உண்மையாக வெளிப்படும் எனும் போது எதற்காக படிக்க வேண்டும்? வள்ளுவர் கூறும் 'உண்மை அறிவு' எது?

தூங்காமணி விளக்கு ஆயினும் தூண்டுகோல் ஒன்று தேவை.  அந்த உண்மை அறிவு என்பது ஒளிர வேண்டுமானால் கல்வி அறிவு தேவை. ஐயன் இதை மறுக்கவில்லை. உண்மை அறிவு என்பதன் முக்கியத்துவத்தை இவ்வாறு உயர்த்திக் கூறுகிறார். இது ஒரு அணி வகையாகும். சிறப்பான ஒன்றை உயர்த்திக் கூற இன்னொரு சிறப்பான விடயத்தை ஒப்பிட்டு அந்த இன்னொன்றை சற்றே தாழ்த்தி எடுத்துரைப்பது இந்த வகை அணி இலக்கணம். நுண்ணிய நூல் பல கற்பதை அவர் இந்த குறளிலும் உயர்த்தித்தான் கூறுகிறார். நூல் பல கற்றாலும் அவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்கிறோம் என்பது முக்கியம் அல்லவா ? அந்த அடிப்படை அறிவு,அந்த அடிப்படை கிரகிக்கும் தன்மை, எதையும் உள்வாங்கிக் கொள்ளும் மனப்பான்மை, தீமையிலிருந்து நன்மையைப்  பிரித்து உணரும் திறன்- இவையெல்லாம் இல்லாமல் கல்வி கற்றால், நூல்களை மட்டும் படித்தறிவதால் என்ன பயன் என்பதைத்தான் இந்தக்  குறள் சுட்டிக்காட்டுகின்றது. அவ்வாறு மேலோட்டமாக நூல் பல கற்பதைத் தான் ஏட்டு சுரைக்காய் என்றார்கள். வள்ளுவர் கூறும் உண்மை அறிவு என்பது என்ன? உண்மை அறிவு என்பதை வரையறுக்க வேண்டுமானால்- இயல்பாக அமைந்த சிந்திக்கும் திறன் என்று கூறலாம். நேரடி...

புன்னகை என்பது காதலின் பல்லவியா?

அன்பின் அரிச்சுவடி . அறிமுகத்தின் ஆரம்பவிழா ஆழமான நட்பின் திறவுகோல் புரிதலின் அறிகுறி புது உறவின் வரவேற்புரை பல்லவி, அனுபல்லவி, முடிவில் சரணம் ….  அன்புக்கு அடிமையாகி விடுவது இயற்கை தான்.