நன்றி கெட்டவர்களுக்கும், துரோகிகளுக்கும் என்ன வேறுபாடு?
துரோகம் செய்நன்றி மறத்தல்
இரண்டுக்கும் வேறுபாடு என்று பெரிதாக எதுவும் இல்லை. முதலாவதின் அடுத்த நிலை தான் இரண்டாவது .
நட்புடன் பழகி நம்மிடமிருந்து பெற முடிந்ததைப் பெற்றுக் கொண்டு விலகி விடுவது முதல் நிலை. இது ஒரு வகை ஏமாற்று வேலை
இதைவிட மோசமானது நம்மிடமிருந்து நயவஞ்சகமாக ஏதோ ஒன்றை அடைந்த பிறகு நமக்கே எதிராக செயல்படுவது
.இழிவானவர்களின் செயல்
இரண்டையுமே மன்னிப்பது கடினம்எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்நன்றி கொன்ற மகற்குதவறுவது மனித இயல்பு மன்னிப்பது தெய்வீக பண்புநாமெல்லாம் சாமானியர்கள் எனவே மன்னிக்க வேண்டாம் மறக்கவும் வேண்டாம் ஒதுங்கி விடலாம்
செய்நன்றி கொன்றவர்களை நினைத்து மனம் புழுங்குவது ஒருவர் தனக்குத்தானே செய்து கொள்ளும் வஞ்சனை ஆகிவிடும்
துரோகத்தை நினைத்து நினைத்து மருகி அதிக துன்பம் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பாதிப்பை அதிகமாகிக் கொள்கிறோம்கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தான் எட்டப்பன்காந்தியை சுட்டுக் கொன்றான் கோட்சேசீசர் மனம் நொந்து பேசுவான்..அவன் இறக்கும் தருவாயில் ப்ரூட்டஸ் நீயுமா என்று கேட்ட அந்த வலி மிகுந்த வார்த்தைகளை யாரால் மறக்க முடியும்காதல் நிராகரிக்கப்பட்டால் வேதனையுடன் எங்கிருந்தாலும் வாழ வாழ்த்தி ஆறுதல் அடைவோர் மேன்மக்கள்உயிருக்கு உயிராகக் காதலித்தவன் அந்தப் பெண்ணைக் கொலை செய்யவும் துணிகிறான் பெண்கள் அதை விடக் கொடுமையாகத் தாக்குகிறார்கள்
அவமானப்படுத்தி ஓட ஓட விரட்டிப் பழிவாங்குகிறார்கள். இழிவான செயல் நாட்டில் நன்மைகள் குறைந்து தீமைகள் மேலோங்கி இருக்கின்றன. எவரும் எதற்கும் துணிந்து எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ள வாய்ப்புள்ளது துரோகிகளிடமிருந்து முழுவதுமாக விலகி நிற்கவேண்டும்
வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பினால் துரோகிகள் ஏற்படுத்தும் ஏமாற்றங்களை சந்திக்க வேண்டிய நிலை தான் வரும
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்.
சில உண்மைகள் கசக்கத்தான் செய்கின்றன.
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது
ஆம். செய்ந்நன்றி மறப்பது அல்லது வஞ்சகம் செய்வது எல்லாமே திட்டமிட்ட சதி தான்.
சில நேரங்களில் அவற்றை முன்கூட்டியே அறிய முடிவதில்லை என்பதுதான் உண்மை.
பணம் பதவி புகழ் இவை பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக