இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கேரள பெண்கள் தங்க நிற பார்டர் போட்ட வெள்ளை நிற புடவை அணிவது ஏன்? வெள்ளை/வெளிர்மஞ்சள் அவர்கள் மரபு வழி புடவையாக மாற காரணம் என்னவென்று கூற முடியுமா?

படம்
 கேரளத்தின் பாரம்பரிய நடனம் மோகினி ஆட்டம் . அதில் அணியப்படும் அழகான உடை வெண்மை நிறத்தில் தங்க சரிகை இழைகளைக் கொண்டு அமைந்திருக்கும். தமிழகத்தின் பரதத்தில் வண்ண வண்ண பட்டாடைகள் எழில் சேர்ப்பது பாரம்பரியம் அவ்வாறில்லாமல் கேரளத்தின் மோகினி ஆட்டக்கலைஞர்கள் சிறப்பாக வடிவமைத்த வெண் பட்டாடையில் நடனமாடுவார்கள். எனவே கேரள பெண்கள் மங்கல நிகழ்வுகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் வெண்மை நிறத்தை விரும்பி அணிந்தனர். வெண்ணிறத்திலேயே முண்டு எனப்படும் உடைகளை அணிந்தனர். படம் :The Hindu படம்:mymandap படம்:weddingwire தமிழகத்தில் கலைமகளுக்கு மட்டுமே வெண்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது. வெண்மை என்பது தூய்மை வெண்மை என்பது புனிதம் வெண்மை என்பது அப்பழுக்கற்ற சிந்தனை. பல வட மாநிலங்களிலும் வெண்மை யான ஆடை அணிந்து ஆலயங்களுக்குச் செல்வதும் விரத நாட்களில் பண்டிகை நாட்களில் வெண்மையான உடை அணிந்து பெண்கள் ஆராதனை செய்வதும் பழக்கம். தமிழ்நாட்டில் வெண்ணிற ஆடையை கணவனை இழந்த பெண்களுக்கு அடையாளப்படுத்திய போது கூட அவளுக்கு ஒரு தூய்மை தன்மை இருக்கிறது என்பதை வலியுறுத்தி அவள் தெய்வத்துக்கு சமமானவ...

…காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம். கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு.." என்ற 'அழகன்' பட பாடலுக்கு ஏற்ப வாழ்ந்த காதலர்கள் இருக்கிறார்களா? இருந்திருக்கிறார்களா? இல்லை என்றால் எல்லாமே கற்பனை கவிதை தானா?

 August 3,2022  ஜாதிமல்லிப் பூச்சரமே  30 வருடங்களுக்கு முன் வந்த பாடல். இன்றும் என்றும் இரசிக்க முடிந்த பாடல். இன்றைய புல்லட் பாடல் போல இருக்காது என்பதுதான் வருத்தம். பொருள் பொதிந்ததாக இருக்கும். வாழ்க்கையை இரசித்து வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள் . கற்பனை என்பதற்கும் ஏக்கம் என்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் இந்தக் கேள்விக்கு விடை. நீல வானில் அவளுக்கு வீடு கட்டித் தரவா என்று அவன் கேட்பதும் நீல வானில் நான் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா என்று அவள் சிரிப்பதும் கற்பனை என்பதற்கு எடுத்துக்காட்டு. "முதலில் கன்னித் தமிழ் தொண்டாற்று, அதை முன்னேற்று" என்பது ஏக்கத்தின் வெளிப்பாடு. மொழியே முதற்காதல்… முந்தையது கனவில் வேண்டுமானால் நடக்கலாம் என்பதைத் தெரிந்தே சொல்வது. கவிதைக்கு அழகு சேர்ப்பது. பிந்தையது -நினைத்தால் நடக்கக் கூடியது. சாத்திய கூறுகள் உள்ளது. கவிதைக்கு அர்த்தம் சேர்ப்பது. கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுத் திருமணம் செய்து கொண்ட இணைகள் எந்தக் காலத்திலும் இருந்து வந்திருக்கிறார்கள். இனிவரும் காலம் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டதால் அதைச் சார்ந்த கொள்கைகளால் இணைய வாய்ப்புண்டு. ஒரே...

'எண்ணங்களை கைகளாக்கி…' 'விண்மீன்களை பொறுக்கி… ' 'கருந்துளையை நிரப்பி…' மேற்கண்ட வரிகளை கொண்டு அறிவியல் கவிதையொன்றை என் தொடுதிரை தோழமை எழுதியிடுமா

படம்
  இறைவனை அல்ல  இறைமையைத் தேடி- பூமி எங்கும் காணாமல்-அண்டம் நோக்கிய பயணம்- கற்பனைக் கலம் ஏறி எண்ணங்களைக் கைகளாக்கி  விண்மீன்களைப் பொறுக்கி  கருந்துளையை நிரப்பி கலகலவென  நகைத்த கணத்தில் - வெளியில் ஒரு தீபாவளி வான்வெளியில் ஒரு வாண வேடிக்கை. உலகம் யாவிலும் ஒரே நொடியில்  புத்தாண்டு   பிறந்த ஆச்சரியம் கோடிக் கதிரவன்கள் ஒன்றாக உதித்த  கோலாகலம் இது என்ன எட்னாவின் கனல்குழம்பா பொன்னை உருக்கி ஊற்றிய ஓடையா சுபர்ணரேகாவா குலோன்டைக் தங்க நதியா அச்சம் கொண்டு அதிர்ந்து நிற்க எதிர்வினையாய்-  ஒரு பாதி போதுமென மீதி  தந்தது கருந்துளை தான். உச்சத்தின் மிச்சமென கதிர்வீச்சு தந்தது துடிப்பண்டம் தான். அள்ளி உள்ளிட்ட விண்மீன்களின் பாதிகளென    வாரி இரைத்த வைரங்கள்  ஒளிப்புள்ளிகளாய்- சுடச்சுடச் சுற்றி வந்தன சொர்க்கமென. அவசரமாய் அள்ளி  மடியில் கட்டிக்கொண்டு  அகிலம் சேர்ந்த நினைவு. pic:Earthsky

இறந்தவர்களின் உடல்

படம்
இறந்தவர்களின் உடலை எத்தனை நாட்களுக்குப் பிறகு புதைப்பது ஏற்புடையது? ராணி எலிசபெத் இறந்து பல நாட்கள் உடலை வெளியே வைத்திருந்து பிறகு புதைத்தது சரியா? ஐக்கிய பேரரசின் மறைந்த அரசி இரண்டாவது எலிசபெத் அவர்கள் செப்டம்பர் எட்டாம் தேதி 2022 இல் மரணம் அடைந்தார். 19.09.2022 ல் அதாவது 12 ஆவது நாள் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசி மரணமடைந்த உடன் முறைப்படி லண்டனின் பாலம் வீழ்ந்தது என்று பிரதமர் லிஸ் ட்ரஸ் கு அறிவித்து அவர் மௌன அஞ்சலி செலுத்தி அதன் பிறகு ஆபரேஷன் லண்டன் ஆரம்பித்தது. அடுத்த நாளே புதியமன்னர் அறிவிக்கப்பட வேண்டும். அதை புதிய மன்னர் உறுதி செய்ய வேண்டும். பாராளுமன்ற நடவடிக்கைகள் யாவும் பத்து நாட்களுக்கு நிறுத்தப்பட்டு அனைவருக்கும் அறிவிக்கப்பட்டு ராணுவ நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டும். ஸ்காட்லாந்து பல்மோரலில் மரணம் அடைந்த அரசியாரின் உடலை அங்குள்ள வழிபாட்டு முறைகளை முறைப்படி செய்த பிறகு சாலை வழியாக வான் வழியாக லண்டனுக்கு திரும்ப கொண்டு வந்தார்கள். அரண்மனையில் இருந்து வெஸ்ட் மினிஸ்டர் ஆபி கொண்டு செல்லப்பட்டது உலக நாடுகளில் இருந்து பல்வேறு தலைவர்கள் குடும்பத்தினர் உறவுகள் நண்பர்க...

நீரளவே ஆகுமாம் நீராம்பல்…என்ற மூதுரையின்முடிவில் 'குலத்தளவே ஆகுமாம் குணம்' என்ற வரிகள் சரி என்று நினைக்கிறீர்களா?

படம்
  குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற வரி மட்டுமல்ல இன்னும் ஆகச்சிறந்த சில வரிகள் தொடர்கின்றன. கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். இந்தப்  பாடலில்,  குலத்திற்கும் குணத்திற்கும் உள்ள உறவு என்ன  என்பதைக் கூறியிருக்கிறார் பாடல் ஆசிரியர். நல்ல குலம் என்பது நற்குணத்தை வைத்து தீர்மானிக்கப்படுவது. அதேபோல் நற்குணம் என்பது நல்ல குலம் என்பதைப் பொறுத்து அமைவது. நீர் பூக்களின் உயரம் நீரின் ஆழத்தை வைத்து தானே அமைகிறது. நீர்மட்டம் உயர உயர தண்டின் உயரம் கூடும். 200 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மூதறிஞர் நிச்சயமாக இன்றைய வகுப்பு வாதம் சார்ந்த பிரிவினை பற்றி உரைத்திருக்க வாய்ப்பில்லை.  இந்தப் பாடலில் இந்த வரியின் பொருள் என்னவென்று பார்க்கலாம் குணத்தை வைத்தே குலம் ; குலத்தை வைத்தே குணம் என்பதை முடிவு செய்யலாம் என்ற உயரிய கருத்து இதில் கூறப்பட்டிருக்கிறது. இதில் வியப்பு என்னவென்றால் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரிகரி மெண்டல் என்ற அறிவியல் அறிஞர் பட்டாணி மற்றும் அவருக்குப் பின் வந்தவர்கள் பன்றி குட்டி இவற்றை வைத்துக் கண்டறிந்த மரபியல் உண்மைகளை இவர் கோடிட்டுக் ...

உடலுக்கும், மனதிற்கும் பாதுகாவலன் கணவன் என்றால், 'ஆன்மாவின் பாதுகாவலன்' யார்? கணவனே கண்கண்ட தெய்வம் என்ற பழமொழி உள்ளதால் இதை கேட்கிறேன், பதில் கூறுவீர்களா?

படம்
உடலுக்கு வேண்டுமானால் கணவன் bodyguard ஆக இருக்கக்கூடும். அதுவும் 24 மணி நேர டியூட்டி பார்க்க முடியாது மனம் காவலா? மாளிகை காவலா? என்று ஒரு சொல்லாடல் உண்டு. ஒரு ஜன்னல் போதும் பெண் மனம் மாறுவதற்கு,மாசு படிவதற்கு எனவே மனக் கட்டுப்பாடு என்பது அவரவர் கைகளில் தான் உள்ளது. அதைக் கணவனாக இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாது. விதி வழியே மதி செல்லும் என்று விருப்பப்படி செல்வோர் சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்று கட்டுப்பாட்டுடன் வாழ்வோர் சிலர். கணவனே கண்கண்ட தெய்வம் என்பது அந்தக் கணவன் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்தது. அன்றும் இன்றும் . ஈரேழு பிறவிகளிலும் இவனே என் துணைவன் என்ற எண்ணம் உள்ள ஒரு பெண்ணுக்கு வேண்டுமானால் கணவன் கண் கண்ட தெய்வமாக இருக்க முடியும்.. பெரும்பாலும் இதுபோல் பெண்ணுக்கும் வாய்ப்பதில்லை, ஆணுக்கும் வாய்ப்பதில்லை. எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் நிறைந்த உலகில் இதற்கு வாய்ப்பில்லை என்பதே கொஞ்சம் கசக்கின்ற உண்மை. இதில் ஆன்மாவின் நிலை என்ன என்று பார்த்தால் . ஈரேழு பிறவிகள்- முதல் ஏழு பிறவிகளைக் கடந்த பிறகு வரக்கூடிய ஞானம் என்பதை இன்னொரு ஏழு வகையாகப் பிரித்து அதை அடைவதற்கா...

'கூடு கெடின் மற்றோர் கூடு செய்வான் உளன்' என்ற திருமந்திரத்தின் பொருள் என்ன? அதை சரியென ஏற்கிறீர்களா? அது சாத்தியம் தானா?

படம்
எத்தனை அற்புதமான பாடல் கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன் நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும் பாடது நந்தி பரிசு அறிவார்க்கே பொதுவாக இந்து மதம் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டது ஒரு பிறவி முடிந்த உடன் உயிர் பிரிந்து இன்னொரு உடலை எடுத்துக் கொள்ளும் என்பது ஒரு ஆழ்ந்த நம்பிக்கை.  அது அவர்களது வினைப் பயனுக்கு  ஏற்ப புழு பூச்சி போன்ற தாழ்ந்த உயிரினமாகவும் மனித பிறவி போன்ற உயர்ந்த  உயிரினமாகவும் பூமியில் பிறக்க வாய்ப்பு உள்ளது என்பதும் பொதுவான இந்து மத நம்பிக்கை. இதுபோன்ற கருத்துக்களில்  நம்பிக்கை இல்லாதவர்கள் கூட (  அதாவது மரணத்திற்குப்  பிறகு-உடலிருந்து உயிர் நீங்கிய பிறகு-  உடல் மட்டும் அடக்கம் செய்யப்பட்டு, அவ்வாறு பிரிந்த உயிர், கண்ணுக்குத் தெரியாமல் இந்த பூமியில் எங்கோ சுற்றிக்கொண்டு ஏதோ ஒரு உடலில் மீண்டும் வந்து புதிய பிறவி எடுக்கும் என்ற கருத்தில்  நம்பிக்கை இல்லாவிட்டாலும்) ஒப்புக்கொள்ளக்கூடிய செய்தி இதோ. இந்து மதம் வலியுறுத்தக் கூடிய முக்கியமான கொள்கைகள் இரண்டு உள்ளன.  ஒன்று நன்னெறி(...

தைரியம் மிக்க ஆண் மகனாய் நிமிர்ந்து வீர நடை போட்ட ஒரு ஆதரவற்ற மனிதர், முதிர்ந்த வயதில் மெதுவான நடுக்கத்துடன் கூடிய நடையில், இனம் புரியாத பயத்தோடு வாழ்கிறார். முதுமை கொடுமையானதாக இருக்கிறதே, மனிதர்கள் முதுமையை எப்படி எதிர்கொள்வது? விளக்குவீர்களா?

படம்
சிறப்பான முதுமைக்கு என்ன வழி?   ஒரு சுவாரசியமான விடயம் என்னவென்றால் மகான்களும் சந்நியாசிகளும் தான் அதிக அளவில் முதுமையைப் பற்றி சிந்தித்து இருக்கிறார்கள். அதைப் பற்றிய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அனேகமாக அவர்கள் எல்லோரும்  பற்றின்மை  ஞானம்  தியானம்  இறைவழிபாடு  இவற்றைத்தான் முதுமையைக்  கழிக்கும் வழியாக கூறுகிறார்கள். Self unfoldment, detachment, mediation,yoga ,spiritual life... blah blah ... இவற்றையெல்லாம் ஒரு முதியவருக்கு நாம் பரிந்துரை செய்வது எந்த அளவிற்கு நடைமுறையில் சரி வரும் என்று பார்க்க வேண்டும். உடல் நலம் குன்றும் போது உளநலம் பாதிக்கும். அதே போல் உள நலம் குன்றும்போது உடல்நலம் சீர்கெடும். பொருளாதார பிரச்சினைகள் இருந்தால் இவை இரண்டும் பாதிக்கும். இவர்கள் வாழுமிடம், அங்கு வாழ்க்கையின் சூழல் சந்திக்கும் மனிதர்களின் அணுகுமுறை வாழ்க்கைத் தரம் என்று இவை அனைத்தும் இவர்களுடைய அமைதியான வாழ்க்கையை பாதிக்கக்கூடும். உடல் நலம் Geriatrics முதியவர்களுக்கான மருத்துவ முறை சிறப்பான பலன்களை அளிப்பதாக உள்ளது (எனவே தான் WHO ஐநா சபையின் உலக ஆரோக்கிய மையம் பல ...