உடலுக்கும், மனதிற்கும் பாதுகாவலன் கணவன் என்றால், 'ஆன்மாவின் பாதுகாவலன்' யார்? கணவனே கண்கண்ட தெய்வம் என்ற பழமொழி உள்ளதால் இதை கேட்கிறேன், பதில் கூறுவீர்களா?
உடலுக்கு வேண்டுமானால் கணவன் bodyguard ஆக இருக்கக்கூடும். அதுவும் 24 மணி நேர டியூட்டி பார்க்க முடியாது
மனம் காவலா? மாளிகை காவலா? என்று ஒரு சொல்லாடல் உண்டு.
ஒரு ஜன்னல் போதும் பெண் மனம் மாறுவதற்கு,மாசு படிவதற்கு
எனவே மனக் கட்டுப்பாடு என்பது அவரவர் கைகளில் தான் உள்ளது.
அதைக் கணவனாக இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாது.
விதி வழியே மதி செல்லும் என்று விருப்பப்படி செல்வோர் சிலர்
விதியை மதியால் வெல்லலாம் என்று கட்டுப்பாட்டுடன் வாழ்வோர் சிலர்.
கணவனே கண்கண்ட தெய்வம் என்பது அந்தக் கணவன் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்தது. அன்றும் இன்றும் .
ஈரேழு பிறவிகளிலும் இவனே என் துணைவன் என்ற எண்ணம் உள்ள ஒரு பெண்ணுக்கு வேண்டுமானால் கணவன் கண் கண்ட தெய்வமாக இருக்க முடியும்.. பெரும்பாலும் இதுபோல் பெண்ணுக்கும் வாய்ப்பதில்லை, ஆணுக்கும் வாய்ப்பதில்லை. எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் நிறைந்த உலகில் இதற்கு வாய்ப்பில்லை என்பதே கொஞ்சம் கசக்கின்ற உண்மை.
இதில் ஆன்மாவின் நிலை என்ன என்று பார்த்தால் .
ஈரேழு பிறவிகள்- முதல் ஏழு பிறவிகளைக் கடந்த பிறகு வரக்கூடிய ஞானம் என்பதை இன்னொரு ஏழு வகையாகப் பிரித்து அதை அடைவதற்கான வழியாக குண்டலினி யோகத்தை சொல்கிறார்கள்.
அந்த ஞானத்தை அடைந்தவர்கள் ஏழு பிறவிகளைக் கடந்தவர்கள் ஆவார்கள்.
மானுட வாழ்க்கையில் இந்தப் பிறவியில் மனதைக் கட்டுப்பாட்டுடன் வைத்து வாழ்பவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் எவரிடமிருந்தும் தேவையில்லை.
ஆத்ம ஞானம் பெற்றவர்களுக்கு அவர்களுடைய ஞானம் அவர்களுக்கு பாதுகாப்பு தரும்.

கருத்துகள்
கருத்துரையிடுக