இடுகைகள்

வெற்றிப் பயணத்தை துவங்கி இருக்கும் சந்திரயான்- 3 பற்றி...

படம்
ஆகஸ்ட் 10 ஆகஸ்ட் 23 வரை பொறுத்திருந்து பார்ப்போம்.. இன்னும் சில நாட்கள் தான் அங்கே போய் பத்திரமாக நிலவின் தரை இறங்கி ரோவர் வெற்றிகரமாக சுற்றி வர ஆரம்பித்த பிறகு -அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் -அதுவும் எவ்வளவு நாட்களுக்கு கிடைக்கும் -எத்தனை வருடங்களுக்கு வேலை செய்யும் -என்னவெல்லாம் தெரிய வரும் என்பதையெல்லாம் பொறுத்துதான் வெற்றி உறுதியாகும். ஏற்கனவே சந்திரயான் 2 மனதை நோகடித்து விட்டது. நிலவின் தரையை மோதி உடைந்து போனது. Lost என்று அறிவித்து கண் கலங்கினர் விஞ்ஞானிகள். அவர்களை நிலவைக் காட்டி சமாதானப்படுத்த வேண்டி இருந்தது. அதற்கு முன்பு 2008 ல்அனுப்பிய சந்திரயான் 1(₹386 croreUS$52 million)இரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டியது 312 நாட்களில் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு விட்டது என்பது வருத்தம். இருந்தாலும் நிலவில் Water ice இருப்பதை உறுதிப்படுத்தி ஓரளவிலான வெற்றியை நிலை நாட்டியது. இன்னும் நிலவின் பரப்பு எதனால் ஆனது அதன் மூலக்கூறுகள் பற்றிய விவரங்கள் கண்டறிய வேண்டும். அந்த நம்பிக்கையில் 2019 ல் அனுப்பியதுதான் சந்திரயான் 2(978 கோடி திட்டம்)US $128 million) இப்போது 2023ல் சந்திரயான் ...

'சாகா வரம் வேண்டும்' என்று இறைவனை வேண்டும் மனிதர்கள் பற்றி கதைகளில் படித்து இருக்கிறேன். இப்போதும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா? மனிதர்கள் தங்களின் வாழும் கால அளவை புரிந்து கொண்டார்கள், அதனால் தற்பொழுது சாகா வரம் கேட்பதில்லை என்பது உண்மையா?

Many happy returns of the day என்று வாழ்த்தும்போது நீண்ட காலம் சாகா வரம் பெற்று சிரஞ்சீவியாக மார்க்கண்டேயனாக வாழ் என்று தானே அர்த்தம் கொள்கிறோம்? எனவே பிறந்தநாள் கொண்டாடும் எல்லோரும் சாகா வரம் தான் வேண்டுகிறோம். நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்.. என்பதற்கு அது தான் பொருள். தீர்க்காயுஷ்மான் பவ என்று வாழ்த்தும்போது சாகா வரம் தான் வேண்டுகிறோம். அர்த்தமில்லாமல் தான் வாழ்த்திக் கொண்டிருக்கிறோமா? உண்மைதான்.மரணம் சர்வ நிச்சயம் என்று எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு இறப்பின் போது எல்லோரும் அழுகின்றார்கள். அப்படி என்றால் உண்மையில் அவர்கள் விரும்புவது சாகா வரம் தானே? மரணத்தைத் தவிர்க்கும் வழி கண்டறிய மனித இனம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது என்றாலும் அறிவியல் ஆராய்ச்சியில் வெற்றி கிட்டும் வரை இறப்பும் தொடரும், பிறப்பும் தொடரும். அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக இறப்பு நின்று விட்டால் பிறப்பும் ஒரு கால் நிறுத்தப்படலாம். ஆம் அந்த நிலையில் பிறப்பு என்பது விருப்பத் தேர்வாக மாறி இருக்கும். இறப்பு என்பது வலி மிகுந்தது என்பதால் அதைத் தேர்வு செய்ய மாட்டார்கள். ஆனால் சாகா வரம் கிடைப்பது ...

விடுதலை 1. திரைப்படம் விடுதலை-1 படத்தில் ஒரு பெண்கள் கூட்டத்தையே காவலர்கள் மானபங்க படுத்துவது போல் எடுத்திருக்கிறார்களே

 இந்த படத்தில் 1980களில் கதை ஆரம்பித்து கூறப்பட்டிருக்கும். 1987-ல் நடந்த சம்பவமாக கதை செல்லும். அதன்பின் இரண்டு வருடங்களில் இந்த சம்பவத்தை விவரிப்பதாக கூறுகிறார்கள். அன்றும் இன்றும்  குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் காவல்துறையினரின் கை ஓங்கி இருந்தது. வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு காவல் துறையை சார்ந்த பல நபர்கள் தங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வந்தார்கள். படத்தில் கூறப்பட்டது போல எண்பதுகளில் என்று திட்டவட்டமாக கூற முடியாது. படத்தில் காலகட்டம் உள்ளிட்ட எல்லாமே கற்பனை என்று கூறியிருக்கிறார்கள். எனவே அந்த எண்பதுகள் தான் அந்த காலகட்டம் என்று சொல்ல முடியாது. உண்மையில் இந்திய விடுதலைப் போராட்ட காலத்தை நினைவு படுத்தியது அந்த குண்டு வைத்து ரயிலை கவிழ்த்த நிகழ்வு. எத்தனையோ புதினங்கள் எழுதப்பட்டன விஜய் சேதுபதி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம் போன்ற விடுதலை வீரன் கதாபாத்திரங்கள் நெஞ்சை விட்டு நீங்காத ரயில் தகர்ப்பு சம்பவங்கள். இந்த விடுதலை திரைப்படம் இரண்டாவது பாகம் வெளிவரும்போது விஜய் சேதுபதி அந்த விடுதலை வீரனாக காட்டப்படுவார் என்று எதிர்பார்க்கலாம். எனவே சுதந்திர போராட்ட காலம்...

மறப்போம்; மன்னிப்போம் ஆனால் .....

படம்
 மறப்போம்; மன்னிப்போம்  இதன்உண்மையான  பொருள் என்ன? தீங்கு செய்தவர்களை  மறப்பதா  மன்னிப்பதா ? இது எப்படி முடியும்? முடியும், முயன்றால் முடியும்! உண்மை தான்.  ஆனால்  அவர்கள் செய்த தீங்கை எப்படி மறப்பது ? எப்படி அதைச்  செய்தவர்களை மன்னிப்பது ? எப்படி என்று பார்க்கலாமா? நீங்கள் மறக்க வேண்டியது தீங்கு செய்தவர்களை மட்டுமே , தீங்கை அல்ல.  நீங்கள் மன்னிக்க வேண்டியது தீங்கு  செய்த மனிதர்களை மட்டுமே , தீங்கை அல்ல . அறிந்தோ அறியாமலோ செய்திருந்தாலும் தீங்கு தீங்கு தான். பாதிப்பு நிஜம். ஏன்? அதன் விளைவுகளை நீங்கள் சந்தித்தீர்கள், பாதிக்கப்பட்டீர்கள். இழந்தீர்கள். அவற்றை நீங்கள் மறக்கக் கூடாது. ஒருபோதும் மறக்கக் கூடாது. அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் அதிகம் அல்லவா? எனவே அந்தத்  தீமைகளை ஒருபோதும் மறக்க வேண்டாம்.   பாடங்கள் உங்களுக்கு என்றுமே கை கொடுக்கும் .  ஆனால் அந்த மனிதர்கள்? அவர்களை மன்னித்து விடுங்கள். அது உங்களுக்கு வலிமை   சேர்க்கும்.  அவர்களை மறந்து விடுங்கள், அது உங்களுக்கு நிம்மதி தரும்.  முடிந்தால் அவர்...