வெற்றிப் பயணத்தை துவங்கி இருக்கும் சந்திரயான்- 3 பற்றி...
ஆகஸ்ட் 10
ஆகஸ்ட் 23 வரை பொறுத்திருந்து பார்ப்போம்.. இன்னும் சில நாட்கள் தான் அங்கே போய் பத்திரமாக நிலவின் தரை இறங்கி ரோவர் வெற்றிகரமாக சுற்றி வர ஆரம்பித்த பிறகு
-அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்
-அதுவும் எவ்வளவு நாட்களுக்கு கிடைக்கும்
-எத்தனை வருடங்களுக்கு வேலை செய்யும்
-என்னவெல்லாம் தெரிய வரும்
என்பதையெல்லாம் பொறுத்துதான் வெற்றி உறுதியாகும்.
ஏற்கனவே சந்திரயான் 2 மனதை நோகடித்து விட்டது. நிலவின் தரையை மோதி உடைந்து போனது. Lost என்று அறிவித்து கண் கலங்கினர் விஞ்ஞானிகள். அவர்களை நிலவைக் காட்டி சமாதானப்படுத்த வேண்டி இருந்தது.
அதற்கு முன்பு 2008 ல்அனுப்பிய சந்திரயான் 1(₹386 croreUS$52 million)இரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டியது 312 நாட்களில் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு விட்டது என்பது வருத்தம். இருந்தாலும் நிலவில் Water ice இருப்பதை உறுதிப்படுத்தி ஓரளவிலான வெற்றியை நிலை நாட்டியது. இன்னும் நிலவின் பரப்பு எதனால் ஆனது அதன் மூலக்கூறுகள் பற்றிய விவரங்கள் கண்டறிய வேண்டும்.
அந்த நம்பிக்கையில் 2019 ல் அனுப்பியதுதான் சந்திரயான் 2(978 கோடி திட்டம்)US $128 million)
இப்போது 2023ல் சந்திரயான் 3.(₹615 cr US$75 million)
வெற்றி கிடைத்து விட்டால் "நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டிவை "எல்லாம் கிடையாது. கட்டிலை கொண்டு போ நிலவில் போட்டு வை…இந்தியாவில் வருங்கால சந்ததியினர் நிலவுக்கு தேனிலவு செல்வார்கள். என் பேரனுக்கு பேரன் டெஸ்டினேஷன் வெட்டிங் அங்கு தான் நடக்கும். இருடா நானும் வரேன்.
சும்மாவே கால் தரையில் நிற்காது.கன்னா பின்னா வென்று "நாட்டுக்குத்து" தான்.
நிலாவுக்கு ஃபேமிலியா வீக் எண்டுக்கு போறோம். அங்கே போய் பாட்டியோடு ஒரு செல்ஃபி.
யாரது பெல் அடித்து கனவை கலைப்பது?
Flying kiss கருத்தரங்கம் எல்லாம் நடத்தாமல்…
நிஜமாகவே சந்திரனில் தடம் பதிக்கும் நான்காவது நாடாக இந்தியா இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் உள்ளது.
நிலவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்..
ஆகஸ்ட் 5 ல் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தபோது கிடைத்த இன்ப அதிர்ச்சி இது.
ஆகஸ்ட் 23 லிருந்து 25க்குள் நிலவின் மேற்பரப்பில் பத்திரமாக தரை இறங்கினாலே வெற்றி உறுதி செய்யப்பட்டு விடும். (திருப்பதிக்கு விஞ்ஞானிகள் மொட்டை அடித்துக் கொள்வார்கள்.ஆரம்பத்தில் அங்கே தானே வேண்டிக் கொண்டார்கள். பழனிக்கு வேணும்னாலும் அடிச்சிக்கிறோம்)
August 17
வெற்றிகரமாக லாண்டர் பிரிந்து விட்டது.
ஆகஸ்ட் 23 ல் தரையிறக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
நிறைய நம்பிக்கையுடன் இந்த முறை களம் இறங்கி இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. மனிதன் நிலவில் வாழ சாத்திய கூறுகள் என்ன என்று கண்டுபிடித்து உலகுக்கே சொல்லப் போகும் சந்திரயான் 3 மிஷன் ஒவ்வொரு இந்தியனுக்கும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சந்திரயான் 1 போல நிறைய தகவல்களை அனுப்பி விட்டு ஓராண்டில் திட்டம் முடிவடையும் என்ற நம்பிக்கை உள்ளது.
🤞
ஆகஸ்ட் 23 க்கு பிறகு பதிவு புதுப்பிக்கப்படலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக