ஒரு தலை காதல் சார்ந்த தற்கொலைகள் அதிகம் டி.ராஜேந்தர் எடுத்த திரைப்படங்களால் தான் நடந்தது என்று ஒரு விவாதத்தில் அறிந்து கொண்டேன். இது உண்மையா? இது பற்றி விளக்குவீர்களா? காதல் பற்றிய திரைப்படங்கள் தற்கொலையை ஊக்குவித்துள்ளதா? டி ராஜேந்தரின் அற்புதமான படைப்புகளாக பார்க்கப்பட்டவை ஒரு தலை ராகம் ரயில் பயணங்களில் உயிர் உள்ளவரை உஷா... குறிப்பாக ஒரு தலை ராகம் இளைஞர்களிடையே வரவேற்பை பெறக் காரணம் அதில் மாணவப் பருவத்தில் ஏற்படும் அற்புதமான உணர்வை அப்படியே திரைக்காவியமாக வடித்திருந்தது தான். கதாநாயகனுக்காக பெண்கள் அழுதார்கள்; நாயகியோடு சேர்ந்து அழுதார்கள். ஆண்கள் கிட்டார் வைத்துக் கொண்டு உருகி உருகி பாடிக்கொண்டிருந்தார்கள். டி ராஜேந்தர் தன்னுடைய சொந்த அனுபவத்தையே கதையாக வடித்து இருந்தார் இதைப்பற்றி நேர்காணல்களில் கூறியுள்ளார். இந்தப் படம் பார்த்த பிறகு தாடி வைத்துக்கொண்டு காதல் தோல்வியில் மாணவர்கள் துவண்டது உண்மை. மாணவிகளோ இழுத்துப் போர்த்திக் கொண்டு கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தனர் . அது ட்ரெண்டிங் ஆகி இருந்தது. ஜீன்ஸ் பாரலல்ஸ் ஹை ஹீல்ஸ் அணிந்த மாணவிகள் கூட சேலை அணிந்த நாட்களில் ஸ்டைலாக ப...