மறப்போம்; மன்னிப்போம் ஆனால் .....

 மறப்போம்; மன்னிப்போம்

 இதன்உண்மையான  பொருள் என்ன?

தீங்கு செய்தவர்களை 

மறப்பதா 

மன்னிப்பதா ?

இது எப்படி முடியும்?

முடியும், முயன்றால் முடியும்! உண்மை தான். 


ஆனால் 


அவர்கள் செய்த தீங்கை எப்படி மறப்பது ? எப்படி அதைச்  செய்தவர்களை மன்னிப்பது ?

எப்படி என்று பார்க்கலாமா?

நீங்கள் மறக்க வேண்டியது தீங்கு செய்தவர்களை மட்டுமே , தீங்கை அல்ல. 

நீங்கள் மன்னிக்க வேண்டியது தீங்கு  செய்த மனிதர்களை மட்டுமே , தீங்கை அல்ல .

அறிந்தோ அறியாமலோ செய்திருந்தாலும் தீங்கு தீங்கு தான். பாதிப்பு நிஜம்.

ஏன்?

அதன் விளைவுகளை நீங்கள் சந்தித்தீர்கள், பாதிக்கப்பட்டீர்கள். இழந்தீர்கள்.

அவற்றை நீங்கள் மறக்கக் கூடாது. ஒருபோதும் மறக்கக் கூடாது. அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் அதிகம் அல்லவா?

எனவே அந்தத்  தீமைகளை ஒருபோதும் மறக்க வேண்டாம்.  

பாடங்கள் உங்களுக்கு என்றுமே கை கொடுக்கும் . 


ஆனால் அந்த மனிதர்கள்?

அவர்களை மன்னித்து விடுங்கள். அது உங்களுக்கு வலிமை  சேர்க்கும். 

அவர்களை மறந்து விடுங்கள், அது உங்களுக்கு நிம்மதி தரும். 

முடிந்தால் அவர்களிடமிருந்து முற்றிலுமாக விலகி விடுங்கள், அது உங்களுக்குப் பாதுகாப்பைத் தரும். 

மீண்டும் மீண்டும் அவர்களுடன் நெருங்கி இருப்பது என்றுமே தீமை விளைவிக்கும்.

அப்படி விலகுவதால் புதிதாக எதை நீங்கள் இழக்கப் போகிறீர்கள்? ஏற்கனவே வேண்டிய அளவுக்கு இழந்தாகி விட்டது.

அதற்காக நீங்கள் பலம் குறைந்தவர் என்று அர்த்தம் இல்லை. புத்திமான் பலவான்.


நீங்கள் புத்திசாலியாக இருப்பதைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லவா? 







கருத்துகள்