'சாகா வரம் வேண்டும்' என்று இறைவனை வேண்டும் மனிதர்கள் பற்றி கதைகளில் படித்து இருக்கிறேன். இப்போதும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா? மனிதர்கள் தங்களின் வாழும் கால அளவை புரிந்து கொண்டார்கள், அதனால் தற்பொழுது சாகா வரம் கேட்பதில்லை என்பது உண்மையா?

Many happy returns of the day என்று வாழ்த்தும்போது நீண்ட காலம் சாகா வரம் பெற்று சிரஞ்சீவியாக மார்க்கண்டேயனாக வாழ் என்று தானே அர்த்தம் கொள்கிறோம்?

எனவே பிறந்தநாள் கொண்டாடும் எல்லோரும் சாகா வரம் தான் வேண்டுகிறோம். நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்.. என்பதற்கு அது தான் பொருள். தீர்க்காயுஷ்மான் பவ என்று வாழ்த்தும்போது சாகா வரம் தான் வேண்டுகிறோம்.

அர்த்தமில்லாமல் தான் வாழ்த்திக் கொண்டிருக்கிறோமா?

உண்மைதான்.மரணம் சர்வ நிச்சயம் என்று எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு இறப்பின் போது எல்லோரும் அழுகின்றார்கள். அப்படி என்றால் உண்மையில் அவர்கள் விரும்புவது சாகா வரம் தானே?

மரணத்தைத் தவிர்க்கும் வழி கண்டறிய மனித இனம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது என்றாலும் அறிவியல் ஆராய்ச்சியில் வெற்றி கிட்டும் வரை இறப்பும் தொடரும், பிறப்பும் தொடரும்.

அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக இறப்பு நின்று விட்டால் பிறப்பும் ஒரு கால் நிறுத்தப்படலாம். ஆம் அந்த நிலையில் பிறப்பு என்பது விருப்பத் தேர்வாக மாறி இருக்கும்.

இறப்பு என்பது வலி மிகுந்தது என்பதால் அதைத் தேர்வு செய்ய மாட்டார்கள்.

ஆனால் சாகா வரம் கிடைப்பது இயலாத காரியம்.

சாகா வரம் கேட்பவர்கள் வாழ்க்கையை மலர்ப் படுக்கையாக அனுபவித்தவர்களாக இருப்பார்கள். சாகும் வரம் கேட்பவர்கள் முட்படுக்கையில் கிடப்பவர்களாக இருப்பார்கள். (இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும் பீஷ்மரை சாகாவரம் பெற்றவராக புராணம் சித்தரிக்கிறது)

வாழ்க்கை மலர்களால் மட்டுமோ அல்லது முட்களால் மட்டுமோ நிறைந்தது அல்ல. வாழ்க்கையின் கூறுகள் எண்ணில் அடங்காதவை.

சாகா வரம் கேட்பவர்கள் சாகும் வரம் கேட்பவர்கள் இந்த இரண்டு வகையினருக்கும் இடையே (இடைப்பட்ட)பல்வேறு நிலைகளில் மனித வாழ்க்கை பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடும் துயரத்தில் இருப்பவர்களும் பெரும்பாலும் மரணத்தை நாடுவதில்லை. உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புவதில்லை.

நம்பிக்கை உள்ளவர்கள் வாழ விரும்புகிறார்கள்.நம்பிக்கை இல்லாதவர்கள் போதும் என்று நினைக்கிறார்கள். இவர்களுக்கு இடைப்பட்ட நிலையில் உள்ள மக்கள் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் நடுவே போராடிக் கொண்டு தொடர்கிறார்கள். வாழ விரும்பினாலும் இறப்பைத் தவிர்க்க முடியாது என்று அறிந்தவர்கள் சிலர்,அறியாத மனிதர்கள் சிலர், அதைப் பற்றி நினைக்காத மனிதர்கள் சிலர் என்று பல வகையினர் ..

இந்த வாழ்க்கை ஒரு வரம் என்று நினைத்தால் சாகா வரம் வேண்டும் என்று தான் எல்லோரும் நினைக்க வாய்ப்புள்ளது.

கருத்துகள்