'எண்ணங்களை கைகளாக்கி…' 'விண்மீன்களை பொறுக்கி… ' 'கருந்துளையை நிரப்பி…' மேற்கண்ட வரிகளை கொண்டு அறிவியல் கவிதையொன்றை என் தொடுதிரை தோழமை எழுதியிடுமா
இறைவனை அல்ல இறைமையைத் தேடி-
பூமி எங்கும் காணாமல்-அண்டம் நோக்கிய பயணம்-
கற்பனைக் கலம் ஏறி
எண்ணங்களைக் கைகளாக்கி
விண்மீன்களைப் பொறுக்கி
கருந்துளையை நிரப்பி
கலகலவென நகைத்த கணத்தில் -
வெளியில் ஒரு தீபாவளி
வான்வெளியில் ஒரு
வாண வேடிக்கை.
உலகம் யாவிலும் ஒரே நொடியில்
புத்தாண்டு பிறந்த ஆச்சரியம்
கோடிக் கதிரவன்கள் ஒன்றாக உதித்த கோலாகலம்
இது என்ன எட்னாவின் கனல்குழம்பா
பொன்னை உருக்கி ஊற்றிய ஓடையா
சுபர்ணரேகாவா குலோன்டைக் தங்க நதியா
அச்சம் கொண்டு அதிர்ந்து நிற்க
எதிர்வினையாய்-
ஒரு பாதி போதுமென மீதி தந்தது கருந்துளை தான்.
உச்சத்தின் மிச்சமென கதிர்வீச்சு தந்தது துடிப்பண்டம் தான்.
அள்ளி உள்ளிட்ட விண்மீன்களின் பாதிகளென
வாரி இரைத்த வைரங்கள் ஒளிப்புள்ளிகளாய்-
சுடச்சுடச் சுற்றி வந்தன
சொர்க்கமென.
அவசரமாய் அள்ளி மடியில் கட்டிக்கொண்டு
அகிலம் சேர்ந்த நினைவு.
pic:Earthsky

கருத்துகள்
கருத்துரையிடுக