கேரள பெண்கள் தங்க நிற பார்டர் போட்ட வெள்ளை நிற புடவை அணிவது ஏன்? வெள்ளை/வெளிர்மஞ்சள் அவர்கள் மரபு வழி புடவையாக மாற காரணம் என்னவென்று கூற முடியுமா?
கேரளத்தின் பாரம்பரிய நடனம் மோகினி ஆட்டம் . அதில் அணியப்படும் அழகான உடை வெண்மை நிறத்தில் தங்க சரிகை இழைகளைக் கொண்டு அமைந்திருக்கும்.
தமிழ்நாட்டில்
வெண்ணிற ஆடையை கணவனை இழந்த பெண்களுக்கு அடையாளப்படுத்திய போது கூட அவளுக்கு ஒரு
தூய்மை தன்மை இருக்கிறது என்பதை வலியுறுத்தி அவள் தெய்வத்துக்கு சமமானவள் அவளைத் தவறாக யாரும் பார்க்கக் கூடாது அவள் மறைந்த
கணவனை தெய்வமாக என்றென்றும் போற்றுபவள் என்று அவளை அடையாளப்படுத்தி துணையற்ற பெண்ணைப் பிறரிடம் இருந்து -குறிப்பாகப் பிற
ஆண்களிடமிருந்து காப்பாற்றினார்கள்.
ஆனால் நடந்தது
என்ன?
.அந்த வெண்ணிற
ஆடை அணிந்ததனாலேயே அந்தப் பெண்ணை சமூகம் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தது. அவளை
அதிர்ஷ்டம் அற்றவளாகப் பார்த்தனர் அறிவற்றோர். ஆண்களும் பெண்களும் இதில் அடக்கம்.
வண்ண ஆடைகள்
கூடாது, பூ பொட்டு உள்ளிட்ட எந்த அலங்காரம் அணிகலனும்
கூடாது . தலைமுடியும் துறக்க வேண்டும் என்று அவள் மீது மூட நம்பிக்கைகளைத் திணித்திருந்த சமூகத்திடமிருந்து அந்தப் பெண்ணை
காப்பாற்ற வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டு விட்டது. மனிதாபிமானம் முற்றிலும் மறைந்து
போனது. அப்படி ஒரு வாழ்வுக்குப் பயந்த பெண்களில் சிலர் உடன்கட்டை ஏறி உயிர்
துறந்தனர்.
அப்போதுதான்
பொங்கி எழுந்தனர் புரட்சியாளர்கள் பெண் விடுதலைக்காக போராடினார்கள் வெற்றி
கண்டார்கள்.
பெண்கல்வி
ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்திருந்தார்கள். அதை மக்களுக்குக் கொண்டு சேர்த்ததில் அவர்களுக்குப்
பெரும் பங்கு உண்டு.
கல்வியின்
துணை கொண்டு மெல்ல மெல்ல வெண்ணிற ஆடைக்கு விடை கொடுத்தனர் கணவனை இழந்த பெண்கள்.
வெள்ளியக் கலையுடுத்திய கல்விக்கரசியாகிய கலைமகளின் அருள் பூரணமாகக்
கிட்டியது
மற்றபடி
வெண்மை நிறம் புனிதமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக