நீங்க மட்டும் ஒரு டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் எடுத்திருந்தீங்கன்னா…' என்று இறந்த கணவனின் போட்டோவை பார்த்து கண்ணீருடன் கேட்பது போன்ற அனைவரையும் பயமுறுத்தும், இன்சூரன்ஸ் கம்பெனி விளம்பரங்கள் நியாயமானது தானா? இவ்விளம்பரம் தடை செய்ய தகுதியானதா?
வணிக மேலாண்மையின் முக்கியமான அம்சம் சந்தைப்படுத்துதல். Marketing சந்தைப்படுத்துதலோடு ஒருங்கிணைந்த பகுதி விளம்பரம் செய்தல். Advertising
விளம்பரம் செய்தல் என்பதை எடுத்துக் கொண்டால் அதில் பலவிதமான அணுகுமுறைகள் உள்ளன.
Before and After” Strategy. ...
முன்னும் பின்னும் என்றொரு யுத்தி.
ஒரு குறிப்பிட்ட ப்ராடக்ட் உபயோகப்படுத்த ஆரம்பித்த பிறகு எப்படி நிலைமை மாறியது என்று எடுத்துக் கூறுவது. பெரும்பாலும் சரும பராமரிப்பில் இது போன்ற உத்தி கையாளப்பட்டு இருக்கும்.
அறிவுரை ஆலோசனை என்றொரு உத்தி
உங்க டாய்லெட்ட சுத்தமா வையுங்க என்று கூறுவது . (சுத்தமாக வைப்பதா தூய்மையாக வைப்பதா? இரண்டும் ஒன்றுதானே இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றெல்லாம் விவாதம் செய்து கொண்டிருந்தோம் சும்மா கிளீன் செய்வது வேறு பாக்டீரியா ஃப்ரீ ஆக மாற்றுவது வேறு இதுதான் வித்தியாசம் என்று முடிவுக்கு வந்தோம்.)
பல வருடங்களுக்கு முன்பு மக்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காக புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்ற கேள்வியை எழுப்பி ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி ஒரு விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். பல சர்ச்சைகளைத் தூண்டியது.
இரக்க சிந்தனை என்பது ஒரு உத்தி
(Appealing to empathy)
சான்றுடன் நிரூபித்தல்
செய்முறை விளக்கம்(Demo)
இன்னொரு பிராண்ட் கூட ஒப்பிட்டு பார்த்தல் என்று ஒப்புமை செய்வது
இப்படி பல உத்திகள் உள்ளன.
மனித உணர்வுகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை சென்றடைய கூடிய விதத்தில் விளம்பரத்தை கட்டமைக்கிறார்கள்.
அது கோபம் வேதனை அச்சம் அன்பு பாசம் துயரம் காதல் என்று 25க்கும் மேற்பட்ட உணர்வுகள் வல்லுனர்களால் வரையறுக்கப்பட்டுள்ளன . இவ்வாறு உணர்வை தூண்டக்கூடிய விளம்பரங்கள் எப்படி வேண்டுமானாலும் உருவாக்கப்படலாம்.
இவையெல்லாம் காலம் காலமாக உலகத்தில் பின்பற்றப்படக்கூடிய வழிமுறைகள் தான்.
அவற்றில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
From the negative to the positive என்பது ஒரு உத்தி.
முக்கியமாக இழப்பீடு என்பதில் ஒரு எதிர்மறை அம்சம் இருக்கிறது அதை நிச்சயம் மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த எதிர்மறை உத்தி தேவைப்படுகிறது.
பொதுவாக இந்த உத்தி லாப நோக்கு இல்லாமல் செயல்படக்கூடிய நிறுவனங்களில் விளம்பரத்திற்காக உபயோகிப்பார்கள்.
எடுத்துக்காட்டாக ஒரு ஆதரவற்ற குழந்தை பாலுக்கு அழுவதாகவும் அதற்கு உதவி செய்யுங்கள் என்று மக்களின் இரக்க சிந்தனையை தூண்டி அவர்களிடமிருந்து நன்கொடை பெறுவதற்காக நிறுவனங்கள் விளம்பரம் செய்வார்கள் ஒரு பால் பாட்டில் படத்தை போட்டு குழந்தை கை நீட்டி அழும் படத்தைக் காட்டுவார்கள். அதைப் பார்க்கும் மக்களும் மனமிரங்கி கண்ணீர் விட்டு உதவி செய்ய முன் வருவார்கள்.
காப்பீடு நிறுவனமும் ஓரளவிற்கு ஒரு சிறு லாப நோக்கம் இருந்தாலும் மக்களுக்கான சேவையை வழங்குவதால் இதுபோன்ற எதிர்மறை கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
உண்மையில் அதை வெகு தூரம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை சற்றே மிகைப்படுத்தப்பட்டதாகவே இந்த விளம்பரங்கள் அமைகின்றன எப்படியாவது மக்களைச் சென்று அடைய வேண்டும் எப்படியாவது விளம்பரம் செய்ய வேண்டும் இதுதானே நோக்கமாக இருக்கிறது மேலும் இது விளம்பர உலகம் இதில் இந்த மாதிரி விளம்பரங்களை தவிர்க்க முடியாது.
அரசுடமையாக்கப்பட்ட நிறுவனங்கள் மென்மையாக விளம்பரம் செய்வார்கள் இப்போது தனியாரிடம் துறை இருப்பதால் என்ன தான் அரசு ஒழுங்குமுறை படுத்து இருந்தாலும் இது போல் சில விளம்பரங்கள் வருவதை இன்றைய போட்டி உலகத்தில் அரசு தலையிட்டு தவிர்க்க முடியாது.
எல்லாமே விளம்பரம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று எங்கு சென்றாலும் எதற்கு எடுத்தாலும் விளம்பரம் தானே விளம்பரத்தின் தாக்கம் மக்களின் நேரத்தை தின்கிறது என்று தான் கூற முடியும். எல்லாவற்றிற்கும் ஒரு வரம்பு இருக்கிறது ஆனால் இன்று வரம்பின்றி நடந்து கொள்வது தான் வாழ்வியல் ஆகிவிட்டது எனவே இது போன்ற விளம்பரங்கள் தவிர்க்க முடியாதவை.
டிஜிட்டல் பேமென்ட் பிளாட்பார்ம் ஒன்றுக்கு அண்மையில் ஒரு விளம்பரம் செய்திருந்தார்கள்.
Phone PE நிறுவனத்தினர்.
துல்கர் சல்மான் அவர்களை வைத்து சிறப்பாக படம் எடுத்திருந்தார்கள் இருந்தாலும் எனக்கு அந்த விளம்பரம் செய்த விதம் வெளிப்படுத்திய கருத்தில் உடன்பாடு இல்லை.
ஒரு இளைஞன் காப்பீடு செய்யாமல் பைக்கில் வந்து காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்ட பிறகு அந்த இடத்திலேயே போன் பே செய்து பிரீமியம் கட்டி தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதாக காட்டியிருந்தார்கள்.
இது காவல்துறையை ஏமாற்றுவது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஒரு தவறான வழிகாட்டுதலாக அமைகிறது காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டால் மட்டும் காப்பீடு செய்து கொண்டால் போதும் என்று ஒரு தவறான முன்னுதாரணத்தை அளிப்பதாக இருந்தது. நல்ல வேளையாக எங்கிருந்தோ வந்த எதிர்ப்பின் காரணமாக அந்த விளம்பரம் மாற்றப்பட்டு அதே துல்கர் சல்மான் வைத்து மக்களிடம் எளிதாக போன் பே மூலமாக பிரீமியம் கட்டலாமே செய்யுங்கள் என்று கூறுவதாக மாற்றி அமைக்கப்பட்டது.
பிறகு பல்வேறு நடிகர் நடிகை வைத்து விளம்பரம் எடுக்கப்பட்டது சற்று கவனத்துடன் செய்யப்பட்டாலும் இந்த விளம்பரத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது.
இது வாகனம் ஓட்டுபவர்கள் காவல்துறையினிடமிருந்து தப்புவது மட்டுமே குறிக்கோள் என்று நினைப்பது போல ஒரு மாயையை மக்களிடையே ஏற்படுத்துகிறது. அவர்களுடைய பாதுகாப்பு என்பது அங்கே புறம் தள்ளப்படுகிறது
விளம்பரப் படம் என்றாலும் அதிலும் சமுதாய அக்கறை வேண்டும் மக்களிடையே நல்ல விடயங்களையும் விழிப்புணர்வையும் கொண்டு செல்ல வேண்டும். டாடா நிறுவனங்களின் வெற்றிக்கு அவர்களுடைய அருமையான விளம்பரங்களை காரணம் என்று கூறலாம்.
இதை அடிப்படையாக வைத்து எப்படி வேண்டுமானாலும் விளம்பரம் எடுக்கட்டும் என்பது என்னுடைய கருத்து.
கருத்துகள்
கருத்துரையிடுக