உதிர்ந்த இதழ்களாக...

உனது விடியலில் எனது அந்தி சாய்ந்து விடுகிறது
நீ துயில் எழுகையில் நான் விழி மூடி வெகு நேரம் கடந்திருக்கும்
நீ விழித்தெழுகையில் நான் நினைவிழந்து நெடுநேரம் சென்றிருக்கும்
நீ தேடுகையில் நான் காணாமல் போய் காலம் கடந்திருக்கும்

உனது மொட்டுக்கள் கட்டவிழ்க்கையில்
எனது இதழ்கள் உதிர்ந்து மண்ணோடு மண்ணாக
மாறி இருக்கலாம்.
நீ மலர் கொண்டு வரும்போது=
 எனது கல்லறை ஈரமும் காய்ந்திருக்கும்.

என்ற போதும்-
உனது செடியின் வேர்களுக்கு  நான்
என்றென்றும்- 
உரமாகவே தொடர்ந்திடுவேன் 
உதிர்ந்த இதழ்களாக.



கருத்துகள்