சுப்' (Chup) படத்தில் "Foolish idealism of youth" தான் போலீஸிலும் ராணுவத்திலும் இளைஞர்கள் சேருவதற்கு காரணம் என்ற வசனம் சரிதானா? இது பற்றி உங்கள் கருத்தை கூறுவீர்களா?



சிறப்பாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். 
இயக்கப்பட்ட விதம்
எடிட்டிங்
கதை
 நடிப்பு என்று எல்லாமே மிகவும் சிறப்பு. 
 ஆனால்....
அதில் இந்த வசனம் தேவையற்றது என்பது என்னுடைய கருத்து.சற்று பொருந்தாததும் கூட. இது சரியில்லை என்ற நெருடல்  இருந்தது.

நல்ல வேளையாக அதை அவர்கள் மேற்கொண்டு விவாதம் செய்யவில்லை. செய்திருந்தால் பிரச்சினையில் மாட்டியிருப்பார்கள்.

Foolish Idealism என்ற  சொல்லாடல்/வெளிப்பாடு எப்போதுமே விவாதத்திற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது. சிறந்ததைத்  தேர்ந்தெடுப்பது Idealism எனும் போது அது எப்படி foolish ஆக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. எத்தனையோ விடைகள்.விவாதங்கள்.

 காவல்துறையிலும் இராணுவத்திலும் பணிபுரிய இளைஞர்கள் கனவு ,ஆர்வம் மட்டும் இன்றி உடல் பலமும் உள்ள பலமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். கூடுதலாக நாட்டுப்பற்றும் பொது நலமும் சேவை மனப்பான்மையும் தேவை.. ஒரு சிறிய அளவுக்கு தியாக மனப்பான்மையும் வேண்டும். ஆக, இவை அனைத்தும் சேர்ந்த ஒரு இளைஞன்/இளம் பெண், மட்டுமே காவல்துறையில் பணியாற்றவும் ராணுவத்தில் நுழையவும் உண்மையான தகுதி பெற்றவர்கள் ஆகிறார்கள்.
இளமையின் வேகமும் துடிப்பும் மட்டும் போதாது.
சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இருப்பது கூட இந்தத் துறைகளுக்குப்  போதாது. ஏனென்றால் எல்லா துறைகளிலும் இவை இருப்பதுண்டு.

இந்தப் படத்தில் பேசப்பட்டிருப்பது  "விமர்சகர்களின்"  செயல்பாடு மற்றும் குற்ற உளவியல் .
விமர்சனம் செய்வோரின் சொற்களால்   ஏற்படும்  பிரச்சனைகள் அவர்கள் எடுக்கக்கூடிய ரிஸ்க், துணிவுடன் செய்யக்கூடிய காரியங்களைப்  பற்றி ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

ஒரு எழுத்தாளனின் பேனாவிற்கு எந்த அளவிற்கு சக்தி இருக்கிறது என்பதை எல்லோரும் அறிவோம் கிட்டத்தட்ட கத்தி முனை போன்றது பேனா.
கத்தியால் உயிரை எடுக்கவும் முடியும் உயிரை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றவும் முடியும் என்பது எல்லோரும் அறிந்தது.
ஒரு தவறான விமர்சனம் சாதிக்க துடிக்கும் ஒரு இளைஞனின் கனவுகளை சிதைத்து அவன் வாழ்க்கையை மொத்தமாகப்  பாழாக்கி அவனை உளவியல் நோயாளியாக ஆக்கக்கூடிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் அதனுடைய சக்தி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு அருமையான படம்.
ஆனால் அதிலிருந்து சற்று திசை திரும்பி இந்த கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது foolish Idealism. வேண்டுமானால்  இதை முன்னிறுத்தி இன்னொரு படம் எடுத்திருக்கலாம். இது முழுக்க முழுக்க ஹீரோ ஓரியண்டெட் மூவி. . திரைத் துறையில் தவறான விமர்சனத்தால் கனவுகள் சிதைக்கப்படும் இயக்குனரின்/ படத் தயாரிப்பாளரின்/கதாசிரியரின்/நடிகனின், அநியாயமான, கொடுமையான  தோல்வி அனுபவம்

அந்தத்  தொழிலை காவல்துறையினருக்கும் ராணுவத்தினருக்கும் ஒப்பாகக்  குறிப்பிட முடியாது.முதல் தவறு அதுதான் 

அடுத்தபடியாக, சாதிக்கத்  துடிக்கும் இளைஞர்கள் எல்லோருமே எல்லா துறைகளிலும் சாதித்து விட முடியாது. உண்மையில் காவல்துறை ராணுவம் இவை எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கும் பணிகள்.
ஒரு இளம்பெண் உயிருக்குத்  துணிந்து ஒரு தவறான விமர்சனத்தை  வேண்டுமென்றே முன்வைத்து அதன் மூலம் ஒரு குற்றவாளியை காவல் துறையனர்  பிடிக்கிறார்கள் என்றால் அது காவல்துறையினருக்கான காவல்துறையினர் வேண்டிக் கொண்டதால் அவள் செய்யும் செயல் தானே தவிர இதில் அவள் விமர்சனம் என்ற துறையில் சாதிக்கிறாள் என்று கூற முடியாது.
காவல்துறையினர் அவளை உபயோகித்துக் கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
அதற்கு அவள் சம்மதிக்காமல் இருந்திருந்தால் வேறு யாராவது அந்தக் காரியத்தை செய்திருப்பார்கள்.என்பது தான் விடை.

இளைஞர்களின் உத்வேகத்தை/ உற்சாகத்தை /சாதிக்கும் வெறியை/ வேகத்தை காவல்துறையினர் இங்கு தங்களுக்கு சாதகமாக அவளது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அதாவது அந்த முட்டாள்தனமான ஐடியலிசம்/ Foolish Idealism என்பது  இந்தப் பெண் அந்த காரியத்துக்கு ஒத்துக் கொள்வதற்கான காரணமாக அமைகிறது  என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
உண்மையில் அந்தப் பெண் முழு மனதோடு இந்த காரியத்திற்கு சம்மதிக்கவில்லை. தனது தாய் உட்பட காவல்துறையினர் உள்ளிட்ட
பல பேர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவள் இந்த காரியத்தில் ஈடுபடுகிறார். இது ஒரு சோதனை முறையான காரியம் தான்.
எல்லா விமர்சகர்களும் உயிருக்கு பயந்து அல்லது உயிருக்கு துணிந்து விமர்சனம் எழுதுகிறார்கள் என்றும் கூற முடியாது.
எந்த அளவிற்கு விமர்சனம் செய்வதில் ஆபத்து இருக்கிறது என்பதை சற்று மிகைப்படுத்தி கூறி இருக்கிறார்கள் என்று கூட கூறலாம்.

சில நேரங்களில் கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல பேனாவால் பிரபலமானவன் பேனாவால் தோல்வியை தழுவவும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் உண்மை.
நுணலும் தன் வாயால் கெடுவது போல.
பணத்திற்கு ஆசைப்பட்டு தவறான விமர்சனம் - அதாவது தவறான மோசமான படத்திற்கு மிக சிறப்பாக விமர்சனம் தருவது என்பது இங்கே சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
மனசாட்சிக்கு புறம்பான, உண்மைக்கு மாறான எந்த ஒரு செயலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதும் வெளிச்சம் ஆகிறது.

வாழ்க்கையில் சிங்கமாக இருக்கணும்னா பலியாடாக மாற தயாராக இருக்கணும் என்று ஒரு தாய் அறிவுரை கூறுவது சற்றே வியப்பை ஏற்படுத்துகிறது.
உண்மையில் அந்த தாய் பார்வையற்றவராக சித்தரிக்கப்பட்டிருப்பது கோவள ஒரு symbolism . பாராட்டலாம். மக்களின் திறமை மீது கொண்ட நம்பிக்கை மட்டுமில்லாமல் பேரார்வம். பெற்றோரின் கண்களை மறைக்கும் பேராசை பிள்ளையின் உயிருக்கு  ஆபத்தை விளைவிக்கும் எல்லை வரை செல்லும்  அதிகப்படியான ஆர்வம். தரமான படைப்பு என்று உணர வைக்கும் திரைப்படம். இலக்கியத்தரம் கொண்டது, Criticism is part of literature. படத்தில் கதாநாயகன் critic of critics . (interesting)

காவல்துறை சார்ந்த ஒருவர் தப்பு தான் இங்கே சரி என்று சொல்வதும் யதார்த்தத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. 
மற்றபடி ரிஸ்க் எடுப்பதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று முட்டாள் இளைஞர்கள் வேண்டுமானால் கூறுவார்கள். மற்றவர்கள்   நகைச்சுவையாகக் கூறலாம் வெறும் விளையாட்டாக. ஆம்.
அறிவுள்ள ஒரு இளைஞன் ஆழம் தெரியாமல் காலை விட மாட்டான். 

SS
சினிமாவைக்  காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த இளைஞன் தவறாக விமர்சனம் செய்யும் அத்தனை பேரையும் கொன்று குவிக்கிறான் ஒரு சீரியல் கில்லர் ஆக  ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனாக இந்த காரியத்தை செய்கிறான்.
இதைக் கூடfoolish Idealism என்று குறிப்பிட முடியாது. காரணம் அவனுடைய கனவு விமர்சகர்களால் சிதைக்கப்பட்டதால் கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய திரைப்படம் தோற்றது போல திரைப்பட உலகமே பாதிக்கப்படக்கூடாது என்று தனக்குள் ஒரு மாயையான Idealism உருவாக்கிக் கொண்டு கொலைகளில் ஈடுபடுகிறான்.


எனவே தான் அவனை  மன நிலை பாதிக்கப்பட்ட நோயாளி என்று குற்றங்கள் சார்ந்த உளவியலாளராக வரும் பெண்மணி  அறுதியிட்டுக் கூறுகிறார்.
Mission oriented killers create a mission in their brain என்று குறிப்பிடுகிறார். தங்களுடைய பழியை தீர்த்துக் கொள்வதற்காக தங்களுக்குள் ஒரு மிஷன் உருவாக்கிக் கொள்கிறார்கள் என்று குற்ற உளவியல் கூறுவதாக தெரிவிக்கிறார்.
திரைப்படம் என்ற துறையை அளவு கடந்து நேசிப்பதும் அதில் சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்பதும் அதற்குத் தடையாக இருப்பவற்றை/தடையாக இருக்கும் மனிதர்களை களைவது களை எடுப்பது என்பதெல்லாம் extremity என்று கூறலாம். இதற்குப் பெயர் கூட foolish Idealism என்று கூற முடியாது.

இது ஒரு சாதனையாளனின் வெறி வேகம் எந்த எல்லைக்கும் சென்று சாதிக்க துணிவது சாதனைக்கு தடையாக இருப்பவர்களை இருந்தவர்களை பழி வாங்குவது இதெல்லாம் extremism தான். அந்த அளவிற்கு ஒரு படைப்பாளி பாதிக்கப்படுகிறான் என்று சற்றே மிகைப்படுத்தி கூறப்பட்டிருக்கிறது.

சாதிக்க முடியாமல் போன திரைப்படத்துறையினரின் உள்ளக் குமுறலை இந்தப் படத்தில் வெளிப் படுத்தி உள்ளார்கள்.
சொல்ல வந்ததை சொல்லி இருக்கிறார்களோ என்னவோ,
காவல்துறை, இளைஞர்களின் சாதனை வெறியைப் பயன்படுத்தி குற்றங்களை கண்டுபிடிக்கிறார்கள் என்று சொல்வது சற்று ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது.
முழு மனதுடன் சம்மதித்து அந்த இளம் பெண் காவல்துறையினருக்கு உதவுகிறார் என்று தான் கூற முடியும் அது அவருடைய முதல் விமர்சனமாக இருந்தாலும் விமர்சனத் துறையில் அவர் தடம் பதிக்க விரும்புகிறார் எனும் போது அவர் எப்படி , தான்  விரும்பிய ,அருமையான நகைச்சுவை நிரம்பிய  படத்திற்கு absolute  torture என்று  விமர்சனம் செய்தார் என்பது வியப்பு. அங்கே அந்தப் பெண்ணின் ஐடியலிசம் சிதைக்கப்பட்டிருக்கிறது.
அவருடைய ஐடியலிசம்  சிதைந்து போகும் வகையில் அவர் செய்த ஒரு காரியம் அவர் மனதையும் சிதைக்க வாய்ப்பு உள்ளது. அவர் பணத்துக்காகவும் காவல்துறையின் கட்டாயத்திற்காகவும் எப்படி இந்த காரியத்தை செய்திருக்க முடியும்? அப்படி செய்திருந்தால் அவருடைய ஐடியிலிசம் அங்கே காணாமல் போய்விட்டது என்று தானே கூற வேண்டும்.foolish or intelligent? ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்று இங்கே அவர் ரிஸ்க் எடுத்து காவல்துறையினருக்கு தான் உதவி இருக்கிறாரே தவிர தன்னுடைய ஐடியலிசம் அவர் பின்பற்றவில்லை. அவருடைய ஐடியல்ஸ் இங்கே காணாமல் போய்விட்டன.
ஒரு கிரிட்டிக்காக மாற வேண்டும்  என்று மட்டும் அவர் நினைத்திருந்தால் அதை ஒரு தொழிலாக மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் அந்த கோணத்தில் அவர்  புத்திசாலித்தனமாக செயல்பட்டு அம்மாவின் சொல் கேட்டு காவல்துறையின் கட்டாயத்திற்கு உட்பட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்பது வேண்டுமானால் அவருடைய நல்ல எண்ணமாக இருந்திருக்கலாம். என்னால் தவறு செய்ய முடியாது  ethics கிடையாது என்று விவாதம் செய்யும் போது அந்த போலீஸ் அதிகாரி இங்கே தவறுதான் சரியாகும்-The right is wrong here, this is your mission- our mission என்று அவரை சமாதானம் செய்கிறார். அங்கே காணாமல் போய்விட்டது  அந்தப் பெண்ணுடைய
Ethics மற்றும் ஒரு விமர்சகராக அவருடைய ஐடியல்ஸ். இங்கே அவர் முட்டாள்தனமாக அந்த காரியத்தில் ஈடுபடவில்லை.

தேவைக்கு ஏற்ப நடந்து கொள்வது எப்படி முட்டாள்தனமாகும்? தன்னுடைய ஐடியல்ஸ் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினால் அது முட்டாள்தனமாகலாம்.
காவல்துறையிலும் ராணுவத்திலும் செயல்பட செய்பவர்கள் தங்கள் குடும்பத்திற்காகவும் பண தேவைக்காகவும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடனும் நாட்டுப்பற்று தியாக மனப்பான்மை போன்ற பிற உயர்நோக்கங்களுடன் செல்கிறார்களே தவிர அது முட்டாள் தனமான ஐடியலிசம் கிடையாது.
உண்மையில் நேர்மையான வழியில் சென்று சாதிக்கக்கூடிய எந்த ஒரு காரியமும் முட்டாள்தனமான ஐடியலிசம் காரணமாக நிகழ்வதில்லை.
காவல்துறையில் குற்றவாளியை பிடிப்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று அவர்கள் காரியத்தை நிறைவேற்றுவார் கள் என்பதை இந்தப் படத்தில் கூறியிருப்பது   ஆட்டை கட்டி வைத்து அதை வேட்டையாட வரும் புலியை சிக்க வைப்பது போல காவல்துறையினர் அந்தப் பெண்ணை ஒரு காரியம் செய்ய வைத்து குற்றவாளியை பிடிப்பது போல காட்டியிருக்கிறார்கள்.

அதேபோல அபிஷியல் ரிவ்யூ எழுதினால் மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் யார் வேண்டுமானாலும் விமர்சனம் எழுதலாம் ஆனால் அபிஷியல் ரிவியூ எழுதும் வாய்ப்பு அந்தப் பெண்ணிற்கு கிடைக்காமல் இருந்தது இப்போது கிடைக்கிறது அது ஒரு தவறான விமர்சனம் தர வேண்டும் என்று நிர்பந்திக்கப்படும்போது அந்தப் பெண் எப்படி அதை எழுதினார் எங்கே போயிட்டு அவருடைய ஐடியல்ஸ் என்ற கேள்வி எழுகிறது?
உண்மையில் அவள் ஐடியலிஸ்டிக்காக இருந்திருந்தால் தவறான விமர்சனத்தை ஒருபோதும் எழுதி இருக்க மாட்டார் அவர் வாய்ப்புக்காக காத்திருந்தார் By hook or crook நான் நினைத்ததை அடைவேன் என்பது மட்டுமே அவளுடைய நோக்கமாக இருந்தால் மட்டுமே இந்த காரியத்தை செய்ய முடியும். உண்மையில் அங்கே realistic approach காலத்திற்கேற்ற புத்திசாலித்தனம் வாய்ப்புக்கு எதை வேண்டுமானாலும் செய்வது என்னும் குணங்களைத் தான் அங்கே காட்டி இருக்கிறது.
, அந்தப் பெண்ணுக்கு இலக்கு ஒன்று மட்டுமே குறியாக இருந்திருக்கிறது அவளுக்கு இருந்தது திரைப்பட துறையின் மீது காதல், விமர்சனம் செய்யும் ஆர்வம் மற்றும் அபிஷியல் ரிவியூ எழுத வேண்டும் என்ற ஒரு குறிக்கோள் போன்ற  இயல்பான விடயங்கள்  இவ்வளவு தானே தவிர அங்கே ஐடியிலசம் ஆப் எனி கைன்ட் இல்லை.

இந்தப் படத்தில் செய்யப்பட்டிருப்பது விமர்சனங்கள் மீதான தாக்குதல் என்று கூறலாம். போலியாக பாராட்டுவதும் தவறு வேண்டுமென்றே நிந்தித்து விமர்சனம் செய்வதும் தவறு அதே போல் விவரங்கள் அறியாமல் விமர்சனம் செய்வதும் தவறு ஒரு மங்கோலியா திரைப்படத்தை அப்படியே காப்பி அடித்து  இந்தியாவில் ஒரு திரைப்படம் சிறப்பாக செய்யப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது அதற்கு ஆஹா ஓஹோ என்ற பாராட்டுதல்கள் வந்தாலும் அந்த இளைஞனுக்கு பிடிக்கவில்லை உண்மையை கூறிவிட்டு அதாவது அந்த படம் காப்பி அடிக்கப்பட்டது என்ற உண்மையை கூறிவிட்டு அதன் பிறகு அதை பாராட்டி இருக்கலாம் அல்லது அவரவர் விருப்பம் போல ஸ்டார் ரேட்டிங் கொடுத்திருக்கலாம் என்பது அவனுடைய தெளிவான கருத்தாக இருக்கிறது.மனசாட்சிக்கு விரோதமில்லாமல் எழுதும் (ethics அடிப்படையில்)  விமர்சகர்களைப் பாராட்டி மலர்களோடு  நன்றி சொல்கிறான் அந்த மனநோயாளி -Psychopath. 
விமர்சகர்கள் அறியாமையில் இருக்கிறார்கள் என்பது அவனுடைய வருத்தம்.
அதிலும் அவனை நேசிக்கும் பெண் தவறான விமர்சனம் கொடுத்தது மட்டுமின்றி கட்டாயத்தின் அடிப்படையிக்க என்றாலும் அந்தப் படம் காப்பியடிக்கப்பட்டது பற்றிய உண்மையை அறியாமல் எழுதியதும் அவனுக்கு கோபத்தை உண்டாக்குகிறது எனவே அவளையும் அழிக்கத் துணிகிறான். மனதளவில் அந்த அளவிற்கு அவனுக்கு  பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது அவன் ஒரு மன நோயாளி என்று காட்டியிருக்கிறார்கள் அதே நேரத்தில் கடைசியில் அவன் படத்திற்கு எதிர்பார்த்த மில்லியன் வியூஸ் அவனுக்கு கிடைக்கும் போது அவன் வெற்றி அடைவதாக படம் முடிகிறது.

அவன் மனநோயாளி அவள் ரிஸ்க் எடுத்து இலக்கை அடைபவள் . யார் தான் உண்மையான idealist . அதைப் படத்தில் எடுத்துக் கூறவில்லை.
மனசாட்சியுடன் விமரிசித்து அதே நேரம் காவல் துறையினரின் பகடைக்காயாக  செயல் பட மறுத்து விலகி விடும் அந்தக் குடும்பத்தலைவனின் செயலை இன்னும் அதிகமாகப் போற்றியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து.   
Foolish Idealism பற்றி குறிப்பிட்ட பிறகு அதற்கான ஒரு தீர்வையும் அவர்கள் கொடுத்திருந்தால் அவர்களுக்கு 5 ஸ்டார் கொடுத்திருக்கலாம்.
அதற்காகவே நான்கு ஸ்டார்கள். 4.5 ஸ்டார் என்றால் அது என்ன அரை ஸ்டார் மிச்சப்படுத்தி என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கக்கூடும்.

கருத்துகள்